ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு தான் இரட்டை இலை சின்னம்!!தினகரனின் கோரிக்கை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!!

  • ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலையை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்று தீர்ப்பளித்தது.
  • இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இரட்டை இலைச் சின்னத்திற்கு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் தரப்பும் சசிகலா தரப்பும் போட்டிபோட்டது.

இதைத்தொடர்ந்து இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இரட்டை இலைச்சின்னத்துக்கு உரிமை கோரி சசிகலா தரப்பும் ஓபிஎஸ் தரப்பு மாறி மாறி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தன. இந்நிலையில் தேர்தல் ஆணையம் இரட்டை இலைச்சின்னத்தை ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியது. தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சசிகலா, டிடிவி தினகரன் தரப்பினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெற்றது.

Image result for இரட்டை இலை

 

இதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலையை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்று தீர்ப்பளித்தது.அதாவது இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியது சரியே என தீர்ப்பளித்தது டெல்லி உயர்நீதிமன்றம்.அதேபோல்  தினகரன் – சசிகலா தரப்பு மனு தள்ளுபடி செய்தது.

இந்நிலையில்  இரட்டை இலை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தினகரன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இரட்டை இலை சின்னம் தொடர்பான தினகரனின் மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும் அமர்வு அறிவிக்கப்பட்டது .உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை இன்று விசாரிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

Image result for இரட்டை இலை

அதன்படி இன்று உச்சநீதிமன்றத்தில் தினகரனின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது.அதில் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.அதேபோல் தினகரனின் கோரிக்கை நிராகரித்தது உச்சநீதிமன்றம். குக்கர் சின்னத்தை டிடிவி தினகரனுக்கு ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment