•  முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது
  • தடைவிதித்த பிசிசிஐக்கு ஸ்ரீசாந்த் மீதான தண்டனையை புதிதாக்கி வேறு விதமாக கொடுக்குமாறும் அறிவித்துள்ளது

முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஸ்பாட் பிக்சிங் செய்ததாக கடந்த 2010 மூன்றாம் கிரிக்கெட் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் முழுதும் தடை செய்யப்பட்டார். இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடியபோது ஸ்பாட் பிக்ஸிங் செய்வதாக பல ஆதாரங்களை திரட்டி அவரை பிசிசிஐ தடைசெய்தது. இந்நிலையில் பல ஆண்டுகால போராட்டத்திற்கு பின்னர் தற்போது உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் ஒரு நிம்மதியான தீர்ப்பினை பெற்றுள்ளார்.

உச்சநீதிமன்றம் அவரது மீதான வாழ்நாள் தடையை விலக்கி உள்ளது. மேலும் புதிய தண்டனையை அவருக்கு கொடுக்குமாறு பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்த தண்டனை இன்னும் மூன்று மாத காலத்திற்குள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.