நோயாளிகளுக்கு ஆன்டிபயோடிக் மருந்துகள் கொடுப்பதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும் – தமிழக ஆளுநர்

நோயாளிகளுக்கு ஆன்டிபயோடிக் மருந்துகள் கொடுப்பதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 4-வது உலக பல் மருத்துவ மாநாடு நடைபெற்றது.இதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கிவைத்தார்.இதன் பின்னர் அவர் பேசுகையில்,நோயாளிகளுக்கு ஆன்டிபயோடிக் மருந்துகள் கொடுப்பதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும் . பல் மருத்துவ துறையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு வந்ததற்காக என்னுடைய  பாராட்டுக்களை தெரிவித்துக்கொள் கிறேன்.மேலும், உடல் வலி, பல் வலி போன்ற பிரச்சினைகளுக்கு ஆன்டிபயோடிக் மருந்துகள் கொடுப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது . மருத்துவர்கள் ஆன்டிபயோடிக் மருந்துகள் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, இதுபோன்ற நவீன சிகிச்சை முறைகளை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.