தூத்துக்குடியை பற்றி பேசாதீங்க....!!! கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுக்கு உத்தரவு

தேர்தலுக்காக தற்போது தீவிரமாக வேலைகள் நடைபெற்று வருகிறது. மதிமுக, திமுக கட்சியுடன்

By leena | Published: Mar 03, 2019 08:40 AM

தேர்தலுக்காக தற்போது தீவிரமாக வேலைகள் நடைபெற்று வருகிறது. மதிமுக, திமுக கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. இதனையடுத்து, மதிமுக திமுக-விடம் 2 தொகுதிகள் கேட்டுள்ளது. ஆனால், திமுக அவர்களுக்கு என்று 1 தொகுதியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. மேலும், வேண்டுமானால் ராஜ்யசபா தருவதாக திமுக கூறியுள்ளது. மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் அவர்களை எதிர்த்து குரல் கொடுக்க வைகோ தான் சரியான ஆள் என்று கருதி, அவரை மாநிங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Image result for kanimoli vs vaiko இந்நிலையில், கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளார். இதற்கு முன்பதாக மதிமுக இந்த தொகுதியை கேட்டுள்ளது. ஏனென்றால், அந்த தொகுதியில், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடி வெற்றி பெற்றதால், அவருக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கும் என்பதால் தூத்துக்குடி தொகுதியை கேட்டுள்ளனர். கனிமொழி போட்டியிட உள்ளதை அறிந்த வைகோ, தூத்துக்குடியை பற்றி வாய் திறக்க வேண்டாம் என கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுக்கு உத்தரவு போட்டுள்ளார். இதனை கேட்டு நெகிழ்ந்து போன கனிமொழி வைகோவுக்கு தான் வகிக்கும் பதவியை கொடுக்கலாம் என யோசனை கூறியுள்ளார். இதனையடுத்து ஸ்டாலினும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.  
Step2: Place in ads Display sections

unicc