திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனை

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் சென்னையில் திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் தொடங்கியது.

சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் இளைஞரணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார்.இளைஞரணி செயல்பாடுகளை வேகப்படுத்துவது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, இளைஞரணி சார்பாக கூட்டங்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின்  நியமிக்கப்பட்ட பின் தனது முதல் ஆலோசனையை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.