அதிமுக அமைச்சரின் சொந்த ஊரில் திமுக பிரமுகர் வெற்றி!

  • தமிழகத்தில் ஊராக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
  • இதில் அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் சொந்த ஊரான சேவூரில் திமுக பிரமுகர் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றிபெற்றுள்ளார். 

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்காக நடைபெற்ற தேர்தலில் தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, 27 மணிநேரத்தினையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் சொந்த ஊர் தான், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேவூர். இந்த சேவூர் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்புக்கான தேர்தலில் திமுகவை சேர்ந்த சர்மிளா போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். அதிமுக அமைச்சரின் சொந்த ஊரில் திமுக பிரமுகர் வெற்றிபெற்றது தற்போது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.