" திமுக கூட்டணி மங்கி போன கூட்டணி " ராஜேந்திர பாலாஜி கிண்டல் ....!!

" திமுக கூட்டணி மங்கி போன கூட்டணி " ராஜேந்திர பாலாஜி கிண்டல் ....!!

  • தமிழகத்தில் அதிமுக திமுக போட்டி போட்டுக் கொண்டு கூட்டணி அமைத்து வருகின்றது.
  • திமுக கூட்டணி மங்கி போன கூட்டணி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டலடித்துள்ளார்.
  பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக போட்டி போட்டுக் கொண்டு கூட்டணி அமைத்து வருகின்றனர். மேலும் மாறி மாறி அவரவர்கள் கூட்டணி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இந்நிலையில் மறைந்த  தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா_வின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிவகாசியில் நடந்தது. சிவகாசியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில் பேசிய அவர், நீதிமன்றத்தில் இருக்கும் பட்டாசு வழக்கைப் பொறுத்தவரை விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்றார்.மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழகத்தில் அதிமுக அமைத்திருக்கும் கூட்டணி மங்களகரமான கூட்டணி  திமுக அமைத்திருக்கும் கூட்டணி மங்கிப்போன கூட்டணி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டலடித்தார்.