இந்திய அணி பேட்டிங்!!மீண்டும் அணிக்கு திரும்பிய தோனி

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான  கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்கிறது.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இன்று  கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது.இதில் வெற்றிபெற்றால் மட்டுமே இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்ற முடியும்.

இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி வீரர்கள் விவரம் :ரோகித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான், அம்பதி ராயுடு,  தோனி,ஜாதவ் ,விஜய் ஷங்கர், புவனேஸ்வர் குமார் , சாஹல், சமி ,கில், பாண்டியா  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Comment