கையில் நீண்ட வாளுடன் தனுஷ்! கர்ணன் பட படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம்!

  • இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கர்ணன்.
  • கையில் நீண்ட வாளுடன் தனுஷ்.

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவரது நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான பட்டாஸ் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கர்ணன். இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்று வருகிற நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை, தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் தனுஷ் கையில், நீண்ட வாளுடன் உள்ளவாறு எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைபபடம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.