முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் சென்று கொண்டிருக்கிறது.! அமைச்சர் கருத்து.!

  • சென்னையில் நடைபெற்ற சேம்பர் ஆஃபர் காமர்ஸ் என்னும் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்துகொண்டார்.
  • அதில், ஜிஎஸ்டி போன்ற பொருளாதார நடவெடிக்கைகளில் மாநில அரசுகளுக்கு உரிய சுதந்திரத்தையும்,அதிகாரத்தையும் மத்திய அரசு மீண்டும் வழங்கவேண்டும்.

சென்னையில் நடைபெற்ற சேம்பர் ஆஃபர் காமர்ஸ் என்னும் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்துகொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜிஎஸ்டி போன்ற பொருளாதார நடவெடிக்கைகளில் மாநில அரசுகளுக்கு உரிய சுதந்திரத்தையும்,அதிகாரத்தையும் மத்திய அரசு மீண்டும்  வழங்கவேண்டும். மாநில அரசுக்கு மேலும் அதிகாரம் அளிக்க வேண்டும். 32 சதவிகிதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்ந்துள்ளோம் என்று அவர்கள் சொன்னால் கூட ஏன் மாநிலங்களுக்கு வரக்கூடிய நிதி குறைந்துகொண்டே போகிறது என்று கூறினார்.

இந்நிலையில், தமிழகத்திற்கு கொடுக்கக்கூடிய நிதி 2000 கோடி குறைந்துவிட்டது. பின்னர் பல விசயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசிடம் சென்று கொண்டிருப்பதாக நினைக்கிறன். மேலும் இது மாற்றப்பட வேண்டிய நிலைமைகள் என்றும், ஜிஎஸ்டியில் தமிழகத்திற்கு 4000 கோடி இழப்பு. ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு எல்லா மாநிலங்களும் தன்னுரிமையை கொடுக்கின்றன என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்