கொரோனா பலி எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள இங்கிலாந்து.!

இங்கிலாந்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 30,076 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியான இடத்தில் தற்போது இங்கிலாந்து உள்ளது. 

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பெரும்பாலான நாடுகளில் பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்வை  தவித்து வருகின்றனர். இந்த கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 

இதுவரை உலகம் முழுக்க கொரோனாவால் 38,20,689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கொரோனா பாதிப்பினால் 2,65,094 பேர் உயிரிழந்துள்ளார். இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான். அந்நாட்டில் இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

அமெரிக்காவில் இதுவரை 74,807 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த பலி எண்ணிக்கை வரிசையில் தற்போது இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து. இங்கிலாந்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 30,076 பேர் பலியாகியுள்ளனர். அந்நாட்டில் 2,01,101 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.