நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ்  கட்சிக்கு பாடம் புகட்டவேண்டும்- முதல்வர் பழனிசாமி

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ்  கட்சிக்கு பாடம் புகட்டவேண்டும் என்று

By venu | Published: Oct 13, 2019 08:58 PM

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ்  கட்சிக்கு பாடம் புகட்டவேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.அதிமுக சார்பில்  நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில்  நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற வைத்து காங்கிரஸ்  கட்சிக்கு பாடம் புகட்டவேண்டும். யாரை தேர்ந்தெடுத்தால் நன்மை கிடைக்கும் என்பதை மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். நன்மை தரும் வேட்பாளர் வேண்டுமா? வெளியூர் வேட்பாளர் வேண்டுமா? என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc