செப்.,24 நாடு தழுவிய போராட்டம்-காங்.அறிவிப்பு!

செப்.,24 நாடு தழுவிய போராட்டம்-காங்.அறிவிப்பு!

  • bjp |
  • Edited by kavi |
  • 2020-09-22 09:11:00
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் செ.,24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. வேளாண் மசோதாவை எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர் கட்சிகள் தொடர்ந்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றது. இந்நிலையில், ஏ.கே.அந்தோணி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்  பிரியங்கா வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டார். கூட்டத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இக்கூட்டத்திற்கு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அந்தோணி   காங்.,கட்சி செப்.,24ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளதாக தகவ தெரிவித்தார்.

மேலும் காங்., செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இது குறித்து தெரிவிக்கையில், "வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாடு முழுவதும் செய்தியாளர்கள் சந்திப்பு தொடர்ந்து நடைபெறும். கட்சி தலைவர்கள், தங்கள் மாநில கவர்னர்களிடம் இது குறித்து குறிப்பாணையை சமர்ப்பிப்பார்கள் என்று தெரிவித்தார்.

Latest Posts

#IPL2020: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத்..!
#IPL2020: சிறப்பாக பந்து வீசிய ஹோல்டர்..155 ரன் இலக்கு வைத்த ராஜஸ்தான்..!
கிசான் சூர்யோதயா, உள்ளிட்ட மூன்று திட்டங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி!
வாணியாறு அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
#BREAKING: ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு..!
"பராசக்தி ஹீரோ டா.. நாங்க திரும்பி வருவோம்" தமிழில் பேசி அசத்தும் தாஹிர்!
முதலைக்கடியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
#BREAKING: மசோதா மீது முடிவெடுக்க அவகாசம் தேவை..தமிழக ஆளுநர்.!
பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுமி புகார்..சிறுவனை கைது செய்த போலீசார்.!
சீனாவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தைவானுக்கு 1.8 பில்லியன் டாலர் ஆயுத விற்பனை.. டிரம்ப் நிர்வாகம் ..!