தமிழக உணவு வகைகளை ருசிக்க காத்திருக்கும் சீன அதிபர் !

இரவு விருந்தில் சீன அதிபருக்கு தமிழக உணவு வகைகள் வழங்கப்பட உள்ளன.
கடற்கரை கோயிலில் கலைநிகழ்ச்சிகள் முடிவடைந்ததை தொடர்ந்து பிரதமர் நரேந்திர  மோடி சீன அதிபர் ஜின்பிங்கிற்கு  நினைவு  பரிசு வழங்கினார் .இதற்கு பின் சீன அதிபருக்கு இரவு விருந்தில் தமிழக உணவு வகைகள் வழங்கப்பட உள்ளன.இந்த விருந்தில் தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளான  தக்காளி ரசம், சாம்பார், கடலைக்குருமா, தோசை, இட்லி, பொங்கல், வடை, கவுனி அரிசி அல்வா, உள்ளிட்ட உணவுகள்  வழங்கப்பட உள்ளது.