சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்! நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த திட்டம்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தாஹில் ரமாணியை இடமாற்றம் செய்ய கொலிஜியம் அமைப்பானது பரிந்துரை செய்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாஹில் ரமானி தனது பதவியை ராஜினாமா செய்து ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அதன் நகலை உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோஹாய் ஆகியோருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த இடம் இடமாற்றத்தை எதிர்த்தும், தாஹில் ரமாணி ராஜினாமாவிற்குஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வுகாண வேண்டும். தாஹில் ரமாணி மீண்டும் நீதிபதியாக அமர்ந்து விட வேண்டும் என கூறி வருகின்றனர். நாளை தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.