பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையில் மாற்றம்! மக்கள் வரவேற்பு!

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், இன்று புதிய அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் அமைச்சர்கள் அறிக்கைகளை சூட்கேசில் எடுத்து வருவது தான் வழக்கம். ஆனால், தற்போது உள்ள மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், தேசிய சின்னத்துடன் கூடிய சிவப்பு நிற துணிப்பையில் அறிக்கையை எடுத்து வந்துள்ளார்.

இவரது இந்த செயல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது. பிரிட்டிசார் இந்தியாவை ஆட்சி செய்த போது, பட்ஜெட் தாக்கல் செய்ய அறிக்கையை சூட்கேசில் கொண்டு சென்றனர். இந்த முறையையே அதற்கு பின் வந்த அமைச்சர்கள் பின்பற்ற துவங்கினர். தற்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறையை மாற்றியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.