#Breaking : பள்ளிகள் திறக்கும் தேதி 3வது முறையாக மாற்றம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

  • ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. 
  • தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு  3-வது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இதற்கான வாக்கு எண்ணிக்கை  ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.எனவே தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக  தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 2 ஆம் தேதிக்கு பதிலாக 3ஆம் தேதி திறக்கப்படும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால் இதற்கு இடையில், ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது .அந்த கோரிக்கையில் ,தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணி ஜனவரி 2 -ஆம் தேதி நள்ளிரவு வரை நடைபெற வாய்ப்பு உள்ளதால் பள்ளிகளை ஜனவரி 3ஆம் தேதிக்கு பதிலாக ஒருநாள் தள்ளிவைத்து ஜனவரி 4 -ஆம் தேதி திறந்திட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது .

இதற்கு ஏற்றவாறு பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில், 3ஆம் தேதி திறக்கப்படும் என்று இருந்த நிலையில் 4ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.ஆனால் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இன்றும் முழுவதுமாக முடியாமல் உள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து  ஜனவரி 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.