ஒசூர் அருகே பாஜக பிரமுகர் படுகொலை.! நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்.!

ஒசூர் அருகே பாஜக பிரமுகர் படுகொலை.! நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்.!

  • bjp |
  • Edited by Bala |
  • 2020-09-16 12:55:32

பாஜக பிரமுகர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓசூர் குந்துமாரணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ரங்கநாத் என்பவர் பாஜகவில் ஒன்றிய இளைஞரணி தலைவராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளன. இதனிடையே, ரங்கானத்திற்கும், அருகேயுள்ள போத்தசந்திரம் கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ரங்கநாத் மகனின் பிறந்தநாளை அவரது வீட்டில் கொண்டாடியுள்ளார். அப்போது, வீட்டிற்குள் புகுந்த ஒரு கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஓட, ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களால் ரங்கநாத்தை தாக்கி கொடூர கொலை செய்தனர்.

இந்நிலையில், பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து போராட்ட இடத்துக்கு வந்த டி.எஸ்.பி அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். இதனிடையே அந்த கிராமத்தை சேர்ந்த தமிழ் என்பாரின் மரக்கடை சூறையாடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார்கள் குவித்து பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

கொல்லும் அரசாக மாறியுள்ள அதிமுக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகரித்துவிட்டது - மு.க.ஸ்டாலின்!
மகாராஷ்டிராவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு...!
 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
சிறு குறு விவசாயிகளுக்கு போர்வெல் அமைத்து தரப்படும் - ஆந்திரா முதல்வர்!
இன்றைய முட்டை விலை...!
இந்தியாவில் ஒரே நாளில் 80 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
குணமாகியவர்கள் எண்ணிக்கை உலகளவில் 2.34 கோடியாக அதிகரித்துள்ளது!
கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை தொடங்குகியது பாகிஸ்தான்.!
மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா..?
கொரோனா தொற்றால் ராஜஸ்தான் மாநில முன்னாள் மந்திரி மரணம்....