போராட்டத்தில் தடியடி ! முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்த சென்னை மாநகர காவல் ஆணையர்

முதலமைச்சர் பழனிசாமியை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்தித்துள்ளார். சென்னை

By Fahad | Published: Apr 02 2020 03:58 PM

முதலமைச்சர் பழனிசாமியை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்தித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் அமைப்புகள் ஒன்று திரண்டு போராட்டத்தில்  நடத்தியது.இந்த போராட்டத்தில் ,காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி தாக்குதல் நடத்தினார்கள்.இந்த தாக்குதலை கண்டித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போராட்டம்  நடைபெற்று வருகிறது. இதற்கு இடையில் இன்று இது தொடர்பாக  முதலமைச்சர் பழனிசாமியை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பில் போராட்டம் குறித்து விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.