நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  பொறுப்பேற்றது முதற்கொண்டு விளையாட்டு துறையை மேம்படுத்து வகையில் பல்வேறு நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல்ல விழாவில் கலந்து கொள்கிறார். பிரதமர் மோடியை சந்திக்கிறார் உதயநிதி  பின் நாளை பிரதமர் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – திமுக அதிமுக இடையே வாக்குவாதம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரியார் நகர் வாக்குச்சாவடியில் அதிமுக மற்றும் திமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை விறுவிறுப்பாக தொடங்கியது. 738 வாக்குச்சாவடிகளில் தற்போது தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இதில், வாக்காளர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினை பதிவு செய்து  வருகின்றனர். 10.10% வாக்குகள் பதிவு  காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக உட்பட மொத்தமாக 77 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் களம் காணுகின்றனர். தற்போது … Read more

இனிமேல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டை இதில் தான் வாங்கி செல்ல வேண்டும்..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் லட்டு பிரசாதத்தை வாங்கி செல்வதற்காக ஓலை பெட்டிகளை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாக முடிவு செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தரிசனம் செய்த பின் லட்டு பிரசாதம் வாங்கி செல்வது வழக்கம். அந்த வகையில் கோவிலுக்கு செல்பவர்களுக்கு லட்டு  பிரசாதம் என்பது முக்கியம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நிலையில் பிரசாதத்தை வாங்கி செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் பிளாஸ்டிக் பைகள், துணிப்பைகள், பேப்பர் பைகள் ஆகியவற்றை விற்பனை … Read more

வேலூர் முள்ளு கத்தரிக்காய் மற்றும் ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு..!

வேலூர் முள்ளு கத்தரிக்காய் மற்றும் ராமநாதபுரம் குண்டு மிளகாய் ஆகிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற மொத்த தமிழக தயாரிப்புகளின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ள நிலையில், தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. கர்நாடகா 46 அதிகபட்ச புவிசார் குறியீடுகளைப் பெற்று முதலிடத்திலும், 36 தயாரிப்புகளுடன் கேரளா மூன்றாவது இடத்திலும் உள்ளது. புவிசார் குறியீடு வேலூர் முள்ளு கத்தரிக்காய் மற்றும் ராமநாதபுரம் குண்டு மிளகாய் ஆகிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. … Read more

சொல்வதை செய்வது கருணாநிதி பாலிசி, சொல்லாததையும் செய்வது ஸ்டாலின் பாலிசி – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சொல்வதை செய்வது கருணாநிதி பாலிசி, சொல்லாததையும் செய்வது ஸ்டாலின் பாலிசி என முதல்வர் பேச்சு.  நாளை மறுநாள் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த நிலையில், இன்றுடன் தேர்தல் பிரச்சாரமும் நிறைவடைகிறது. ஸ்டாலின் பாலிசி இந்த நிலையில், இன்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், சொல்வதை செய்வது கருணாநிதி பாலிசி, சொல்லாததையும் செய்வது ஸ்டாலின் பாலிசி என … Read more

சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு எந்த இருக்கை வழங்கப்படும்..? – அப்பாவு கருத்து

அனைவருக்கும் சமமான உரிமை கொடுப்பதே எங்களது நோக்கம் என சபாநாயகர் அப்பாவு பேட்டி.  சபாநாயகர் அப்பாவு அவர்கள் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பாவு பேட்டி  அப்போது பேசிய அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஈரோடு தேர்தல் பரப்புரையில் கூறியது போல மகளிர் உரிமை தொகை ரூ.1000 இந்த ஆண்டு தகுதியுள்ள நபர்களுக்கு வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் … Read more

நாட்டின் அனைத்து நிறுவனங்களையும், பாஜக, ஆர்எஸ்எஸ் கைப்பற்றி நாசமாக்கியுள்ளது – சோனியா காந்தி

நாட்டின் அனைத்து நிறுவனங்களையும், பாஜக, ஆர்எஸ்எஸ் கைப்பற்றி நாசமாக்கியுள்ளது என சோனியா காந்தி பேச்சு.  சோனியா காந்தி அவர்கள் முன்னிலையில் ராய்பூரில் நடைபெற்று வரும் காங்கிரஸ் மாநாட்டை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே கொடியேற்றி தொடங்கி வைத்தார்.  சோனியா காந்தி பேச்சு  இந்த நிகழ்வில் உரையாற்றிய சோனியா காந்தி அவர்கள், பாரத் ஜோடா யாத்திரை காங்கிரஸுக்கு ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனக்கு மகிழ்ச்சி அளிப்பது என்னவென்றால் பாரத் ஜோடா யாத்திரையோடு என்னுடைய இன்னிங்ஸ் முடியக்கூடும் … Read more

இது இளம் தேர்வர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது – டிடிவி தினகரன்

தேர்வுகளில் குளறுபடி என்ற செய்தி 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் தேர்வர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது என டிடிவி தினகரன் ட்வீட்.  டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.  தமிழ்நாடு முழுவதும் 186 தேர்வு மையங்களில் 51,071 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 32 தேர்வு மையங்களில் 8,315 பேர் தேர்வு உள்ளனர். இந்த நிலையில், சென்னை பல தேர்வு மையங்களில் குரூப் 2 முதன்மை தேர்வு தொடங்குவதில் … Read more

ELECTIONBREAKING : முதல்வரின் அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது – அதிமுக குற்றசாட்டு

முதல்வரின் பிரச்சாரம் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என அதிமுக குற்றசாட்டு.  ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே உள்ளது. இந்த நிலையில், அங்கு தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுவதோடு, வாக்கு சேகரிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5 மணிக்குள் அனைத்து கட்சி மற்றும் நட்சத்திர பேச்சாளர்களும் தங்கள் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு, மாலை 6 மணிக்குள் அனைவரும் வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வர் பிரச்சாரம்  இந்த நிலையில், … Read more

ஆளுநரை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்  சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த சில  நாட்களுக்கு முன்னதாக மார்க்சியம் குறித்து  ஆளுநர் பேசிய பேச்சை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பேசிய கே.பாலகிருஷ்ணன், … Read more