ஒப்புதல் அளிக்காத ஆளுநர்… சட்டமாக்கிய அரசு… அரசாணை வெளியிட்டு அதிரடி….

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவிற்கு கடந்த 45 நாட்களாக ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. இந்நிலையில், சட்ட விதி 162ஐ பயன்படுத்தி  தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அடிப்படையாகக் கொண்டு, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கான அரசாணையை … Read more

மிலாடி நபி திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வாழ்த்து…

இன்று மிலாடி நபி திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர்  வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி:  மானுடம் தழைக்க இறைத்தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்தால், வாழ்வில் ஏற்றம் பெறலாம். இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த இந்த இனிய நாளில், உலகில் அன்பும், அமைதியும், சமாதானமும், சகோதரத்துவமும் தவழட்டும் என்று வாழ்த்தி, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது … Read more

பரம்பரை பரம்பரையாக நிகழ்ந்து வரும் ஊழல் நாட்டுக்கு ஒரு பெரிய சவாலாக இருப்பதாக மோடி கருத்து…

சி.பி.ஐ. எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு  சார்பில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு தேசிய மாநாடு 3 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி நேற்று முந்தினம் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பரம்பரை பரம்பரையாக நிகழ்ந்து வரும் ஊழல் நாட்டுக்கு ஒரு பெரிய சவாலாக இருப்பதாக கூறினார். இதுகுறித்து அவர், உங்களுக்கு முன்னால் இருக்கும் மற்றுமொரு சவால் குறித்து இன்று நான் குறிப்பிடுகிறேன். இந்த சவால் … Read more

நீங்கள் வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு… மராட்டிய முதல்வரை தாக்கிய கங்கனா…

நீங்கள் வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு என்று மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவை நடிகை கங்கனா ரனவத் தாக்கி டிவிட்டரில்  பதிவிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணை தொடர்பாக மும்பை காவல்துறையையும், மராட்டிய  மாநில அரசையும் நடிகை கங்கனா ரனவத் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த விவகாரம் குறித்து நேற்று முன்தினம் நடந்த சிவசேனா கட்சியின் தசரா பொதுக்கூட்டத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே கங்கனா ரணாவத்தை மறைமுகமாக தாக்கி பேசினார். அவர் பேசும்போது, … Read more

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை திட்டம்… தொடக்கிவைத்தார் தமிழக முதல்வர்….

இளம் வழக்கறிஞர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிடும் நோக்கில், 2 ஆண்டு காலத்திற்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் தமிழக முதல்வர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,  சட்டப்படிப்பினை முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், பார் கவுன்சிலில் நிரந்தர பதிவு சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழும தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னர், இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் … Read more

₹.81.24 கோடியில் கட்டப்பட்ட 21 பாலங்களை திறந்து வைத்தார் தமிழக முதல்வர்…

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் ₹.81 கோடியே 24 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 21 புதிய பாலங்களை தமிழக முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை கொரட்டூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கிராசிங்க்கு  மாற்றாக, ₹.21 கோடியே 96 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதையை வீடியோ கான்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார். மேலும் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், ராமநாதபுரம், தர்மபுரி, திருச்சி, அரியலூர், தென்காசி, … Read more

ஆன்லைன் சூதாட்ட வலைதளங்களை தடை செய்ய ஜெகன் மோகன் மத்திய அமைச்சருக்கு கடிதம்…

ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் சிலர் தங்களது சேமிப்பு பணத்தை எல்லாம் ஆன்லைன் விளையாட்டுகளில் பந்தயமாக கட்டி விளையாடுகின்றனர். ஆனால் விளையாடும் அனைவருக்கும் அவர்களது பணம் திரும்ப கிடைத்துவிடுவதில்லை. இது போன்ற ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து சிலர் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் நடிக்கக் கூடாது என்றும் தற்போது கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர … Read more

இந்தியாவின் லடாக்கை சீனாவுக்கு சொந்தமாக்கிய டுவிட்டர்… இதற்கு 8 ஆண்டு சிறை தண்டனை…

சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டிருந்த இருப்பிட அமைப்பில், இந்தியாவின் லடாக்கை, சீனாவின் ஒரு பகுதியாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. மேலும் அந்த சமுக வலைதள நிறுவனம் இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தியது. இந்த நிலையில் தகவல் பாதுகாப்பு மசோதா-2019 தொடர்பாக டுவிட்டர் பிரதிநிதிகள் குழு ஒன்று நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராகியது. அப்போது லடாக் சர்ச்சை குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இந்த விவகாரத்தில் … Read more

பூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை தொடங்கிய ஈரான்…

 கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே  அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது. அதன் பின்னர் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இதற்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக புறக்கணித்தது. அதன்படி இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் புதிய அணு உலையை ஈரான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்டத் தொடங்கியது. … Read more

டிரம்பின் பிரசார இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்…

ஐக்கிய அமெரிக்கா குடியரசில் வரும்  3-ஆம் தேதி அதிபர்  தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில்  டிரம்ப் மீண்டும் போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களமிறக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில் அதிபர்  வேட்பாளர் இருவரும் ஒவ்வொரு மாகாணமாக சென்று தீவிரமாக  பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல  டிரம்பின் பிராசார குழு தனி இணையதளம் வாயிலாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு … Read more