உலக அளவில் சாதனை செல்வங்களாய் விளங்க வாழ்த்துகிறேன்.! அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி.!

கலைத்திருவிழாவில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்று வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இடம்பெற வேண்டும். அதன் பிறகு உலக அளவில் சாதனை செல்வங்களாய் விளங்க வேண்டும். – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு வாழ்த்து.  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகளுக்கு விசிட் அடித்து ஆய்வு செய்து மாணவ மாணவியர்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். அதன்படி, இன்று திருச்செந்தூர் வந்திருந்த அவர் பிரசித்திபெற்ற முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். அதன் … Read more

நீட் தேர்வில் சாதிக்க தொடங்கிய அரசு பள்ளி மாணவர்கள்;குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் திமுக அரசு – எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

நீட் தேர்வில் வெற்றி பெற்ற கோவை மாணவர்களுக்கு கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மருத்துவ பட்டப் படிப்பில் சேரும் மாணவர்களுக்காக கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீட் தேர்வின் முடிவு வெளியாகி உள்ளது. இதில்,தமிழகத்தை சேர்ந்த சில மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.குறிப்பாக, கோவை மாவட்டம் அன்னூர் வட்டாரத்தில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 5 … Read more

தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு – அரசாணை வெளியீடு!

தொழிற்கல்விப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் 7.5% முன்னுரிமை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு. தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என விரிவான விளக்கங்களுடன் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டு சலுகையைப் பெற மாணவா்கள் 6ம் முதல் 12ம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த வாரம் நடைபெற்ற … Read more

ஒப்புதல் அளிக்காத ஆளுநர்… சட்டமாக்கிய அரசு… அரசாணை வெளியிட்டு அதிரடி….

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவிற்கு கடந்த 45 நாட்களாக ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. இந்நிலையில், சட்ட விதி 162ஐ பயன்படுத்தி  தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அடிப்படையாகக் கொண்டு, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கான அரசாணையை … Read more