இன்னொரு மகாபாரத போர் இந்தியாவில் நடக்க வேண்டுமா?ஒவைசி கேள்வி

துணை குடியரசு தலைவராக வெங்கையா நாயுடு  குறித்த   புத்தக வெளியீட்டு விழா சென்னையில்

By venu | Published: Aug 15, 2019 09:30 AM

துணை குடியரசு தலைவராக வெங்கையா நாயுடு  குறித்த   புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சர் அமித் ஷா,பிரகாஷ் ஜவடேகர்,தமிழக ஆளுநர்,முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணனும் , அர்ஜூனனும் போன்றவர்கள்.இதில் யார் கிருஷ்ணன் ?யார் அர்ஜுனன் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்  என்று  பேசினார்.
இந்த நிலையில் ரஜினியின் பேசியதுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், மோடியும், அமித்ஷாவும் அர்ஜூனர் கிருஷ்னர் போன்றவர்கள் என்று  கூறுகிறார். அது ஒரு புறத்தில் இருக்கட்டும். அப்படி என்றால் யார் கெளரவர்கள், யார் பாண்டவர்கள்?  என்று கேள்வி எழுப்பினார்.
இன்னொரு மகாபாரத போர் இந்தியாவில் நடக்க வேண்டுமா? என்றும்  ஒவைசி கேள்வி எழுப்பினார்.
Step2: Place in ads Display sections

unicc