அனுஷ்கா என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வரம்-கோலி ..!

இந்திய கேப்டன் கோலி , பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை கடந்த 2017-ம் ஆண்டு

By Fahad | Published: Mar 28 2020 12:14 PM

இந்திய கேப்டன் கோலி , பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் கேப்டன் கோலி விளையாடும் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் தளத்தில் ரசிகர்களுடன் கணவர் கோலியை உற்சாகப்படுத்துவர். சில சமயங்களில் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களும் எழுந்து உள்ளது.அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அனுஷ்கா ஷர்மா மைதானத்திற்கு வந்து கொண்டு தான் இருக்கிறார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸில் விளையாடி வரும் கோலி அங்கு உள்ள ஒரு தொலைக்காட்சி  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது பேசிய கோலி , எனது கிரிக்கெட் வாழ்வை விட அனுஷ்கா ஷர்மா என் வாழ்க்கையில் கிடைத்தது மிகப்பெரிய வரம். சரியான துணையை தான் தேர்வு செய்து உள்ளேன்.எனக்கான இடத்தை முழுமையாக புரிந்து கொண்டு வைத்து உள்ளார்.என்னை சரியான பாதையில் வழி நடத்தி செல்கிறார்.அவரிடம் இருந்து நான் நிறைய கற்று கொள்ள வேண்டும் என கூறினார்.

More News From virat kohli