இறந்த குரங்கை கட்டியணைத்து அழும் தாய் குரங்கு! இதன் உண்மை பின்னணி என்ன?

கடந்த மூன்று வாரங்களாக அமேசான் காடு தீ பற்றி எரிந்துக் கொண்டு இருக்கிறது. இதனால் பிரேசில் முழுவதும் புகை மூட்டமாக மாறி உள்ளது. இதனால், அமேசான் காட்டில் உள்ள பல வகையான மிருகங்கள், பூச்சி இனங்கள், பறவைகள் ஆகியன அழிந்துள்ளன.

இந்நிலையில், அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில், இறந்த தன் குட்டி குரங்கை தாய் குரங்கு மார்போடு கட்டியணைத்து அழுவது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த புகைப்படத்தை ஷேர் செய்து #prayforamazon என்ற ஹெஸ்டக்கும் வைரலாகி வருகிறது.

ஆனால் இந்த புகைப்படம் 2017-ம் ஆண்டு இந்திய புகைப்படக்கலைஞர் அவினாஷ் லோதியால் எடுக்கப்பட்ட புகைப்படம்  தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவினாஷ் கூறுகையில், இதுபோன்ற விலங்கின் உணர்ச்சிகளை புகைப்படமாக்கியது இதுவே முதல் முறை என்றும், இப்படம் அவரது மனதிற்கு நெருக்கமான புகைப்படம் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், அந்த புகைப்படத்தின் உண்மை பின்னணி என்னவென்றால், அந்த குழந்தை குரங்கு மயக்க முலையில் உள்ளது. அனால், அதன் தாய் குரங்கு இறந்துவிட்டதாக எண்ணி மனமுடைந்து அழுவதாகவும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.