இங்கிலாந்தில் மேலும் ஒரு இந்திய மருத்துவர் பலி.! இன்னும் 5 மருத்துவர்கள் கவலைக்கிடம்.!

கொரோனா பாதிப்புல் சிக்கி தவிக்கும் இங்கிலாந்து நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சுமார் 65 ஆயிரம் இந்திய மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் 70 சதவீதம் பேர் இந்தியாவிலேயே பயிற்சி பெற்றவர்கள். 

2 நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தை சேர்ந்த இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் ஜிதேந்திர ரோதட் என்பவர் கொரோனா தாக்குதலால் உயிரிழந்தார். 58 வயதான இவர்  வேல்ஸ் ஹாட்ரி பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்.

தற்போது, கேரள மாநிலம் கோழிக்கோடு மருத்துவ கல்லூரியில் பயிற்சி பெற்ற மருத்துவர் கம்சா பச்சேரி கொரோனவால் உயிரிழந்தார். 80 வயதான இவர் லண்டனிலுள்ள பிர்மிங்கம் என்னுமிடத்தில் வசித்து வந்துள்ளார். 

இந்த தகவலை இங்கிலாந்தில் உள்ள இந்திய டாக்டர்கள் சங்க தலைவர் டாக்டர் ரமேஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.மேலும், 5 இந்திய மருத்துவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்களுக்கு செயற்கை சுவாசம் கொடுத்து வருவதாகவும் தகவல் தெரிவித்தார். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.