அங்கன்வாடிகளுக்கு விடுமுறை -சத்துணவை வீடுகளுக்கு சென்று வழங்க உத்தரவு

கொரோனா அச்சம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை

By venu | Published: Mar 16, 2020 01:58 PM

கொரோனா அச்சம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது.சீனாவை மட்டுமல்லாமல் 127 நாடுகளில் பரவி கொரோனா உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோருக்கு  கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் ஆனந்த்.மேலும் குழந்தைகளுக்கு தேவையான சத்துணவை தயாரித்து வீடுகளுக்கு சென்று வழங்க ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Step2: Place in ads Display sections

unicc