கடந்த 24 மணி நேரத்தில் 578 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு.!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 78 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 50,129 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரே நாளில் 578 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம், இன்று 89.78 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம்  தெரிவிக்கின்றது. இதுவரை, இந்தியாவில் கொரோனா தொற்றால் 7,864,811 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,18,534 பேர் உயிரிழந்துள்ளனர், 70,78,123 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,68,154 பேர் சிகிச்சை பெற்று … Read more

மகாராஷ்டிரா :சிறைகளில் உள்ள 1,043 கைதிகள், 302 சிறை ஊழியர்களுக்கு கொரோனா.!

மகாராஷ்டிராவில் உள்ள சிறைகளில் இதுவரை 1,043 கைதிகளும், 302 சிறை ஊழியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளிடையே கொரோனா பரவலை தடுக்கவும், நெருக்கத்தை குறைக்கவும் உயர் அதிகாரக் குழுவின் பரிந்துரைகளின்படி 10,480 கைதிகளில் 2,444பேர் பரோலிலும், மீதமுள்ளவர்கள் ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மகாராஷ்டிராவில் உள்ள சிறைகளிலுள்ள கைதிகளில் … Read more

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.! ஊரடங்கை நீட்டித்த பீகார் மாநில அரசு.!

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பதன் காரணமாக பீகார் மாநில அரசு ஊரடங்கை செப்டம்பர் 6வரை நீட்டித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பீகாரில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 3814 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பீகாரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 103383 ஆக உயர்ந்துள்ளது. அதனை கணக்கில் கொண்டு பீகார் மாநில அரசு, ஏற்கனவே ஆகஸ்ட் 16 வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை செப்டம்பர் … Read more

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வர ஒன்றரை ஆண்டுகள் ஆகலாம் – சௌமியா சுவாமிநாதன்.!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்ட பின்னர் அவை சந்தைக்கு வர கிட்டத்தட்ட 1.5 ஆண்டுகள் ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் வெவ்வேறு கட்ட பரிசோதனையில் 3 தடுப்பூசிகள் உள்ளது. சமீபத்தில் மோடி அவர்கள் ஆராய்ச்சியாளர்கள் பச்சை கொடி காண்பித்து அனுமதி அளித்ததும் நாடு முழுவதும் கொரோனாவுக்கான தடுப்பூசிகள் மிகப் பெரிய அளவில் தயாரிக்கப்படும் … Read more

குஜராத் :ராஜ்கோட் மத்திய சிறையில் உள்ள 23 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி.!

குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மத்திய சிறையில் உள்ள 23 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மத்திய சிறையில் மொத்தமாக 1,386 கைதிகள் உள்ள நிலையில், அதிலுள்ள 94 கைதிகளுக்கு இரண்டாம் கட்டமாக கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சனிக்கிழமையன்று இரவு 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கூறிய சிறை கண்காணிப்பாளர் பன்னோ … Read more

ராயபுரத்தில் கொரோனா வைரஸ் மொத்த பாதிப்பு 8,500 ஐ தாண்டியது..!

ராயபுரத்தில் இதுவரை மொத்தமாக 8,506 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 4000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று 2,027 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு விபரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில், அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை … Read more

ஊரடங்கை மீறினால் உடனடியாக கைது தான்.!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கை மீறினால் உடனடியாக கைது செய்ய காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.  சென்னையில் கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அதில் அவர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்க ளில் வரும் ஜூன் 19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த 4 மாவட்டங்களில் இருந்து … Read more

இந்தியாவில் கொரோனா நிலவரம்.!

உயிரிழந்தோர் எண்ணிக்கை  6,075 ஆக உயர்ந்துள்ளது.  கொரனோ வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில், இதுவரை உலக அளவில், 6,567,058 பேர்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 387,899 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவை பொறுத்தவரையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணக்கை 2,07,615-ல் இருந்து 2,16,919 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட 2,16,919 பேரில் 1,04,107 பேர் இதுவரை குணமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை  6,075 ஆக உயர்ந்துள்ளது.   

மும்பையில் மேலும் 20 பேர் பலி & 791 பேருக்கு கொரோனா உறுதி

மும்பையில் நேற்று மட்டும் 20 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 791 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் 67,152 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,206  ஆக உயரிந்துள்ள நிலையில் 20,917 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கெரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 22,171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் மேலும் 791 … Read more

கர்நாடகாவில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி !

கர்நாடகாவில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி ! இந்தியாவில் மேலும் 4,213 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,152ஆக உயரிந்துள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து 20, 917 பேர் குணமடைந்து உள்ளனர். கடந்த 24 நேரத்தில் 97 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 2,206ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 858ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் … Read more