ரூ.8,835 கோடி முதலீடு,35520 பேருக்கு வேலை -வெளிநாட்டு பயணம் குறித்து முதலமைச்சர் விளக்கம்

வெளிநாட்டு பயணத்தில் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது

By Fahad | Published: Apr 01 2020 01:55 AM

வெளிநாட்டு பயணத்தில் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக முதலமைச்சர் பழனிசாமி  இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் தனது 13 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு  முதலமைச்சர் பழனிசாமி  சென்னை திரும்பினார்.இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில்,வெளிநாட்டு பயணத்தில் மொத்தம் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது . இதன் மூலம் 35 ஆயிரத்து 520 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

More News From foreign trip