8 வழிச்சாலை தொடர்பான வழக்கு : இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

  • சென்னை – சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். 
  • தடைக்கு எதிராக, திட்ட இயக்குனர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெறுகிறது. 

சென்னை – சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்க  ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டமிட்டது மத்திய அரசு.இந்த திட்டத்தில் விவசாய நிலங்களை அரசு, கையகப்படுத்துவதை எதிர்த்து நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது.பின்னர் இந்ததிட்டத்துக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்றும் நிலம் கையகப்படுத்த தடையும் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

8 வழிச்சாலைக்கு நிலம் கையப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக, திட்ட இயக்குனர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.விசாரணையின் போது விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.

ஆனால் இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மத்திய அரசு தரப்பில்  3 மாதங்களுக்கும் மேலாக ஆவணங்கள் தாக்கல் செய்யாததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை  இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.