6 மருத்துவ கல்லூரிகளுக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்- ராமதாஸ்

தமிழகத்தில் அமையவுள்ள 6 மருத்துவ கல்லூரிகளுக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை கடுமையாக எதிர்க்கும் காங்கிரசின் நிலைப்பாட்டை திமுக ஏற்கிறதா? என்று  கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் அமையவுள்ள 6 மருத்துவ கல்லூரிகளுக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்கும் போது வட மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளை மத்திய அரசு விரைந்து தொடங்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.