துருக்கி வீசிய குண்டுகள் மூலம் சிரியாவில் இருந்து 785 ஐ.எஸ் பயங்கரவாதி தப்பினர்..!

சிரியாவில் பல நாடுகளை சார்ந்த  ஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்த்து சிரியா ஜனநாயக படை போர் செய்து வருகிறது. இந்த படை குர்து படை, அரபு ராணுவம், அமெரிக்க ராணுவம் இணைந்தது.  சிரியாவில் இருந்து  அமெரிக்க ராணுவம் விலகியதை தொடர்ந்து குர்து படை மீது பகையாக இருந்த துருக்கி ராணுவம் கடந்த 5 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான குர்து படை சேர்ந்தவர்களும் ,பொதுமக்களும் பலியாகியுள்ளனர். இந்த சிரியா ஜனநாயக படை சுமார் 12,000 ஐ.எஸ் பயங்கரவாதிகளை சிறையில் அடைத்து வைத்துள்ளது.
இந்நிலையில் ஆயின் இஸ்ஸா  என்ற பகுதியில் துருக்கிப் படைகள் வீசிய குண்டுகள். அங்கிருந்த சிறையில் சேதப்படுத்தியது. இதனால் அந்த சிறையில் இருந்து785 ஐ.எஸ் பயங்கரவாதிகள் தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
murugan