டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் : காலை 10 மணி நிலவரம் என்ன ?

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி 4.33% வாக்குகள் பதிவாகியுள்ளது .

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார்.இந்த ஆட்சி நிறைவு பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.அதன்படி  இன்று டெல்லியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.ஆம் ஆத்மி, பாஜக ,காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகிறது.

டெல்லியில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,46,92,136 ஆகும். தேர்தலுக்காக 13,750 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 10 மணி நிலவரப்படி 4.33% வாக்குகள் பதிவாகியுள்ளது .