ஈரானில் தவித்த 275 இந்தியர்கள் ராஜஸ்தான் வந்தனர்.!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.  இந்த வைரஸ் ஈரான் , இத்தாலி  , ஸ்பெயின் போன்ற நாடுகளில் அதிகம் தாக்கி உள்ளது. இந்நிலையில் ஈரானில் கொரோனாவால்  92,472 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 10,023 ஆக உள்ளது.

இதையடுத்து ஈரானில் 600 இந்தியர்கள் சிக்கி தவிப்பதாக செய்திகள் வெளியானது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து முடங்கியது.  பின்னர்  மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு 277 இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வந்தது. அவர்கள் அனைவரும் ராணுவ நலவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்  இன்று சிறப்பு விமானம் மூலம்  ஈரானில் இருந்து மேலும் 275 இந்தியர்கள் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூருக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள ராணுவ நலவாழ்வு முகாமிற்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

author avatar
murugan