10 % இடஒதுக்கீட்டு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்…!!

மாநிலங்களவையில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது.இன்றோடு முடிவடைய இருந்த மாநிலங்களவை கூட்டத்தொடரை சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மேலும் ஒருநாள் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.மத்திய அரசின் இந்த நீட்டிப்பு முடிவை கண்டித்து எதிர் கட்சிகள் மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

எதிர் கட்சிகளின் அமளிகளுக்கு 10 % இடஒதுக்கீட்டு மசோதாவை தாக்கல் செய்ய பட்டதும் எதிர்க்கட்சிகளின் கூச்சலால் அவையை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதையடுத்து மாநிலங்களவையை மதியம் 2 மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.பின்னர் மாநிலங்களவை  கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.தற்போது மாநிலங்களவையில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கன  10 % இடஒதுக்கீடு மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.149 பேர் ஆதரவாகவும் , 7 பேர் எதிராகவும் இந்த மசோதாவுக்கு  வாக்களித்தனர். பெரும்பாண்மை ஆதரவுடன் இந்த மசோதா மாநிலங்கவையில் நிறைவேற்றப்பட்டது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment