ராட்சசனின் ராட்சச வெற்றி!! நாளுக்கு நாள் அதிகரிக்கும் திரையரங்கம்!!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்து முண்டாசுபட்டி இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ராட்சசன். இப்படம் சைக்கோ த்ரில்லர் வகையை சார்ந்து எடுக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு காட்சிகளும் சுவாரஸ்யமாகவும், த்ரில்லாகவும் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. படம் நல்ல வெற்றியை விஷ்ணு விஷாலுக்கு தேடி தந்தது.

இப்படம் கேரளாவில் ரிலீஸாகும் போது வெறும் 21 தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸானது. ஆனால் ரிலீஸாகி 5 வாரம் இப்படம் சுமார் 101 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் கர்நாடகாவில் இப்படம் 1 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து உள்ளது.

Source CINEBAR

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment