பாஜகவின் சினிமா கம்பெனி ‘லை ஹார்டு’ : ராகுல் டிவீட்

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்ற பின்னர், முதன்முதலாக நடந்த கட்சி கூட்டத்தில் அவர் கலந்துகொண்டார். அது முடிந்த பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ராகுல், ‘குஜராத்  வளர்ச்சி என்பதே பொய். பிரச்சாரத்தின்போது மக்களிடம் நான் பேசுகையில் வளர்ச்சியே இல்லை என்றுதான் தெரிவித்தனர். பாஜகவின் அடித்தளமே பொய்யானது. பாஜக தலைவர் அமித் ஷா மகனின் நிதி முறைகேடுகள் குறித்த கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கவில்லை. 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உண்மை வெளியே வந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகளை பாஜக திரித்துக் கூறியது’  என அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாஜகவுக்கு ஒரு சினிமா கம்பெனி இருந்திருந்தால் அதன் பெயர் ‘லை ஹார்டு’ என்று இருந்திருக்கும்’ என குறிப்பிட்டார். #BJPLieHard #BJPLies #HowManyBJPLies என்ற ஹேஷ்டேகுகளையும் அவர் அமைத்திருந்தார்.

source : dinasuvadu.com

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment