சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு…திட்டமிட்டு பிரச்சனையை உண்டாக்கும் RSS , BJP…கேரள முதல்வர்

கேரள ஐய்யப்பன் கோவிலில் திட்டமிட்டு பிரச்சனையை உண்டாக்கும் RSS , BJP  என கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறியுள்ளார்.
கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகள் , RSS , BJP போராட்டம் நடத்தி கேரள ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வன்முறையை ஏற்படுத்தி வருகின்றனர்.சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவிற்கு பிறகு இரண்டு முறை கோவில் நடை திறக்கப்பட்ட போதும் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் மேற்கொள்கிறார்கள்.
இது குறித்து சபரிமலை விவகாரத்தில் கேரள ஆளும் இடதுசாரி அரசுக்கு எதிராக போராட்டம் தொடரும் நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க நாங்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய  கேரள முதல்வர் பினராய் விஜயன் கேரள பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசுகையில், ஐயப்பன் கோவிலில் போராட்டம் மேற்கொள்பவர்கள் அய்யப்ப பக்தர்கள் கிடையாது. திட்டமிட்டு பிரச்சனையை உண்டாக்க வேண்டுமென்று RSS , BJP தொண்டர்கள் முகாம் அமைக்கிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலில்  பிரச்சனையை ஏற்படுத்த யாரையும் அரசு அனுமதிக்காது.அய்யப்ப பக்தர்களுடன என்னுடைய அரசு நிற்கிறது. சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த முயற்சி செய்த காரணத்தினால் என்னுடைய அரசு குறி வைக்கப்படுகிறது. சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் எங்களுடைய அரசு எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவது என்பது அரசியலமைப்பு பொறுப்பாகும்.சபரிமலை ஐயப்பன் கோவில்  விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவதை தவிர்த்து அரசிடம் எந்தஒரு வழியும் கிடையாது. கேரளாவில் தன்னுடைய கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று சங்பரிவார் முயற்சி செய்கிறது என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்தார்.
DINASUVADU.COM 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment