"கிழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை" EPS_யை கிண்டல் செய்த பிரேமலதா..!!

18 MLA_க்கள் தகுதிநீக்க வழக்கு தீர்ப்பு குறித்து ‘கிழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்று பிரேமலதா விஜயகாந்த் கிண்டல் செய்துள்ளார்…

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான தீர்ப்பு குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்துள்ளார்.முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜியும், சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதி சத்யநாராயணாவிடம் சென்றது.
இதையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் என உத்தரவிட்டுள்ளார். இது டிடிவி தரப்புக்கு ஏமாற்றத்தையும், ஈபிஎஸ் தரப்புக்கு உற்சாகத்தையும் அளித்துள்ளது. மேலும், அடுத்தகட்டமாக தினகரன் தரப்பு என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “தமிழகத்தில் நிலையான ஆட்சி இல்லை; பேரவையில் முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இடைத்தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிசாமி பேசுவது, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment