ஒருநாளில் இத்தனை மணி நேரம் கேம்ஸ்! இத்தனை மணி நேரம் சீரியல்!! இந்தியர்களின் சா(சோ)தனை!!!

உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் நம்நாடு உள்ளது. ஆதலால் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிமாக உள்ளது. அதில் இன்டெர்நெட், வீடியோ, கேம்ஸ் என பல விதமாக நேரத்தை ஸ்மார்ட் போன்களில் செலவிடுகின்றனர்.
இதனை குறித்து உலகளவில் ஓர் ஆய்வு நணத்தப்பட்டது. அதில் பப்ஜி போன்ற வீடியோ கேம்களை விளையாடுவோரின் எண்ணிக்கையையும் நேரத்தையும் கணக்கிட்டது. அதில் இந்தியாவில் ஸ்மார்ட் போன் கேம் விளையாடுவதில் இந்தியர்கள் சராசரியாக 1 மணிநேரம் செலவிடுகின்றனர்.
அதேபோல யூ-டியுப், நெட்ப்ளிக்ஸ் போன்ற இணையதளங்கிளில் சீரியல் பார்ப்பவர்கள் ஒரு நாளில் 45 நிமிடம் அவர்கள் நேரத்தை ஸ்மார்ட் போனில் நேரத்தை செலவிடுகின்றரர். இந்த கணக்கீடு படி உலகளவில் 5 இடத்திற்குள் இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கால்வாசி நபர்கள் இரவு 7 மணி முதல் 12 வரை தான் அதிகமாக ஸ்மார்ட் போன்களில் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment