ஐயப்பன் கோவில் போராட்டம் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்படும் காவல் ஆணையர் மனோஜ்…!!

ஐயப்பன் கோவில் போராட்டம் தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது  கேரள நீதிமன்றத்தில் காவல் ஆணையர் மனோஜ் அறிக்கை தாக்கல் 
கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.இதனால் கேரளாவில் 144 தடை உத்தரவு , தடியடி மற்றும் காவல்துறையுடன் மோதல் என அடுத்தடுத்து பரபரப்பாக கடந்த ஒரு வாரம் சென்றது.இந்நிலையில் நேற்று ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்ட்து.
இந்நிலையில் இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் காவல் ஆணையர் மனோஜ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.இதில் நவம்பரில் கார்த்திகை முதல் வாரம் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும்.அப்போது ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வழிபட வருவார்கள்.இந்த நிலையில் போராட்டம் தொடர்ந்து நடந்தால் அசாதாரண சூழலில் கூட்ட நெரிசலால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என அறிக்கையாக கேரள நீதிமன்றத்தில் காவல் ஆணையர் மனோஜ் தாக்கல் செய்துள்ளார்.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment