இரண்டாவது முறையாக ஜி.வி.பிரகாஷை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்…!!

சிம்புவை வைத்து ‘ஏஏஏ’ படத்தை இயக்கி நஷ்டத்தை அடைந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், தற்போது ஜி.வி.பிரகாஷை வைத்து மீண்டும் ஓர் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் நடிகை யார் என்ற விவரம் வெளியில் அறிவிக்காமல் இருக்கிறார்கள். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காதலை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இந்த படத்தை 3டி கேமராவில் படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 10 நாட்களில் முடிவடைய இருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment