இந்தியாவில் புதிய முறையால் வெறும் நான்கு நாட்களில் காணாமல் போன 2930 குழந்தைகள் கண்டுபிடிப்பு !

டெல்லி காவல்துறை ,முகத்தை அடையாளம் காணும் முறை மூலம், நான்கே நாட்களில் காணாமல் போன 2930 குழந்தைகள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கு உதவியாக நாடு முழுவதும் காப்பகங்களில் உள்ள குழந்தைகளின் விவரங்களைப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தரவில்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்திருந்தது.

இதையடுத்துக் காப்பகங்களில் உள்ள குழந்தைகளின் விவரங்களைப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் டெல்லி காவல்துறைக்கு வழங்கியது. இதில் 45ஆயிரம் குழந்தைகளின் விவரங்களை முக அடையாளங்காணும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆராய்ந்ததில் நான்கே நாட்களில் 2930குழந்தைகள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இந்த அடையாளங்களையும் பெற்றோர் கொடுத்த அடையாளங்களையும் சரிபார்த்துக் குழந்தைகளை ஒப்படைக்க முயற்சி நடைபெற்றுவருவதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment