அமிர்தசரஸ் குண்டு வெடிப்பில் பாகிஸ்தான் தொடர்பா…? பஞ்சாப் முதல்வர் பரபரப்பு பேட்டி..!!

அமிர்தசரசில் வீசப்பட்ட வெடி குண்டுகளை பாகிஸ்தானில் தயாரித்திருக்கலாம் இருக்கலாம் என்று  பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநில தலைநகர் அமிர்தசரசுக்கு அருகே ராஜாசான்சி பகுதியில் இயங்கி வந்த மத வழிபாட்டு தல கட்டிடத்தில் நேற்று முன் தினம் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 2 மர்மநபர்கள் கையெறி குண்டு எடுத்து வீசினர். அந்த குண்டு  பயங்கர சத்தத்துடன் வெடித்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.10 பேர் வரை பலத்த காயமடைந்தனர்.இதனால் அமிர்தசரஸ் முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது. இதை தொடர்ந்து பஞ்சாப் மாநில  முதல்வர் அமரிந்தர் சிங் குண்டு வெடிப்பு இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்,.
அப்போது அவர் கூறுகையில்  பிரார்த்தனை கூடத்தில் வீசப்பட்ட கையெறி குண்டுகளில்  பாகிஸ்தான் நாட்டின் அடையாளங்கள் காணப்படுகின்றன. அந்த குண்டுகள் பாகிஸ்தான் ஆயுத தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பிரிவினைவாத குழுக்களான ஐ.எஸ் தீவிரவாதிகள் , காலிஸ்தான் பயங்கர்வாதிகள் அல்லது காஷ்மீர் பயங்கரவாத கும்பல்  இந்த தாக்குதலில் ஈடுபட்டு  இருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்று பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்தார்.
dinasuvadu.com
author avatar
Dinasuvadu desk

Leave a Comment