அனைத்து விஜய் ரசிகர்களையும் ஒன்றிணைக்க அட்லீயின் புதிய பிளான் ..!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார். இவர் உலகம் முழுவதும் மிக பெரிய ரசிகர்கள் பலத்த கொண்டிருப்பவர் என்பது அனைவருமே அறிந்த விசியம். தற்போது ரசிகர்கள் அனைவரும் விஜயின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வரும் ஜூன் 22-ல் பிறந்த நாள் கொண்டாட உள்ளார் தளபதி விஜய். அதற்காக ரசிகர்கள் பலரும் பல விதமான கொண்டாட்டங்களை திட்டமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் அட்லீ விஜயின் பிறந்த நாளுக்கான ஸ்பெஷல் COMMON DP புகைப்படத்தை வரும் ஜூன் 17 இரவு 7 மணிக்கு வெளியிட உள்ளாராம். மேலும் இதற்காக #ThalapathyBdayCDP என்ற டேக்கும் உருவாக்கப்பட உள்ளதாம். அட்லீ விஜயை வைத்து தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment