தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஜீரோ டிலே வார்டு அமைக்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஜீரோ டிலே வார்டு அமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட்டில் புதிய ஆக்சிஜன் படுக்கைகளை தொடங்கி வைப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத் தறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் சென்றுள்ளார். இந்த நிகழ்வுக்கு பின்பதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் எனவும், 890 தமிழக மருத்துவமனைகளுக்கு காப்பீட்டு திட்டத்தின் கீழ் நோய் தொற்று உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும்தமிழக அரசிடம் 2 லட்சம் தடுப்பூசிகள் உள்ளதாகவும் அதை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், மக்கள் மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல் காத்திருப்பதை தவிர்க்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஜீரோ டிலே வார்டு அமைக்கப்படும் எனவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனைகளின் ஆக்சிஜன் படுக்கைகள் காலியாகும் பொழுது நோயாளிகள் அவர்களின் நோய் தகுதிக்கேற்ப வார்டில் சேர்க்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal