“தோனிக்கு பதிலாக நான் கேப்டனாக நியமிக்கப்படுவேன் என எதிர்பார்த்தேன்” – யுவராஜ்சிங் ..!

  • கடந்த 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில்,தோனிக்கு பதிலாக,தன்னை கேப்டனாக பிசிசிஐ அறிவிக்கும் என்று எதிர்பார்த்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியின் தோல்விக்குப்பிறகு,இந்திய அணியை மீட்டெடுக்க,தொடக்க டி20 உலகக்கோப்பைக்கு புதிதாக ஒரு கேப்டனை நியமிக்க வேண்டும் என  பிசிசிஐ அதிகாரிகள் முடிவெடுத்திருந்தனர்.அப்போது,தோனிக்கு பதிலாக,தன்னை கேப்டனாக அறிவிப்பார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்ததாக,யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக,யுவராஜ் சிங் 22 யார்ன்ஸ் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் கூறியதாவது:

“கடந்த 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.இதனால்,இந்திய அணியில் குழப்பம் நிலவியது.அதன் பிறகு,தொடக்க டி20 உலகக்கோப்பையும் இருந்தது. மேலும்,2 மாதகால இங்கிலாந்து பயணம் மற்றும் ஒரு மாதகால தென் ஆப்பிரிக்கா பயணம் இருந்தது.

அவ்வாறு,தொடர்ச்சியாக 4 மாதங்கள் வெளிநாடு பயணம் இருந்ததால், அப்போது அணியின் மூத்த வீரர்களான கங்குலி,டிராவிட்,சச்சின் உள்ளிட்டோர் ஓய்வு எடுத்துக் கொண்டனர்.இதனால்,டி20 உலகக்கோப்பைத் தொடரை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.

இதனையடுத்து,2007 ஆம் ஆண்டிற்கான டி 20 கேப்டனாக பிசிசிஐ வாரியம் என்னை நியமிக்கும் என்று நான் எதிர்பார்த்தேன்.ஆனால்,அணியின் கேப்டனாக தோனி அறிவிக்கப்பட்டார்.

எனவே,யார் கேப்டனாக இருந்தாலும்,அவரை 100 சதவிகிதம் ஆதரிக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து,நடைபெற்ற 2007 உலகக் கோப்பை டி20 தொடரில், பிளிண்டாப் ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்தேன். இதனால், பிளிண்டாப் என்னைப் பார்த்து,’இங்கே வா உன் கழுத்தைத் திருகி எறிகிறேன்’ என்றார்,அதற்கு பதிலளிக்கும் வகையில்,  ‘என் பேட் எங்கெல்லாம் போகும் என்பதும் உனக்குத் தெரியும்’ என்று நான் கூறினேன்.

இதனையடுத்து,இனி வரும் ஒவ்வொரு பந்தையும் மைதானத்துக்கு வெளியே அடிக்க வேண்டும் என்று எனக்கு கோபம் வந்தது.பின்னர்,பிராட் வீசிய முதல் பந்து அதிர்ஷ்டகரமாக மைதானத்திற்கு வெளியே பறந்தது. 2 வது பந்து ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் மத்தியில் போய் விழுந்தது.தொடர்ந்து,3வது பந்திலும் சிக்ஸ் அடித்தேன்”,என்று தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வுபெற்று 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்,முதல் முறையாக கேப்டன் பொறுப்பு கிடைக்காத ஏமாற்றத்தை,யுவராஜ் சிங் தற்போது பகிர்ந்துள்ளார்.