22 வயதில் இளம் ஐபிஎஸ் அதிகாரியான குஜராத் இளைஞர்.!

  • நாட்டின் இளம் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையை குஜராத்தை சேர்ந்த 22 வயதான ஹாசன் சஃபின் பெற்றுள்ளார்.
  • ஹாசன் சஃபின் பேசுகையில் ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதே தனது கனவு.

குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்திலுள்ள கனோதார் கிராமத்தை சேர்ந்த சஃபின், கடந்த ஆண்டு நடைபெற்ற மத்திய குடிமை பணிகள் தேர்வில் 570-வது ரேங்கில் தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து ஐ.பி.எஸ் பயிற்சி முடிந்து ஜாம்நகர் மாவட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சஃபின். இந்நிலையில், வரும் 23-ம் தேதி அவர் ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார். இதனால் அவர் நாட்டின் இளம் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையையும் அடைகிறார்.

பின்னர் அவர் கூறுகையில், ஐபிஎஸ் அதிகாரியாக தகுதி பெற்றிருந்தாலும், ஐஏஎஸ் அதிகாரியாக, வேண்டும் என்பதே தனது கனவு என தெரிவித்தார். இருப்பினும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நாட்டிற்கு சேவையாற்ற விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்