தூய்மை பணியாளர்களின் காலில் விழுந்து வணங்கிய அமைச்சர் உதயகுமார்.!

தூய்மை பணியாளர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் என கூறி அவர்கள் காலில் விழுந்து வணங்கினார் வருவாய்துறை அமைச்சர் உதயகுமார்.

மதுரை திருமங்கலம் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் சுமார் 750 தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டு அரிசி, வேட்டி, சேலை, முகக் கவசவம், கிருமிநாசினி ஆகியவற்றை பணியாளர்களுக்கு வழங்கினார்.

அந்த விழாவில் பேசுகையில், ‘ மதுரை மாவட்டத்தில் சுமார் 32 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மாநகராட்சி பகுதியில் மட்டும் 15 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு தினசரி பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது. குறிப்பாக தூய்மைப் பணியாளர்கள் கடவுளுக்கு சமமானவர்கள்.’ என புகழ்ந்து பேசி, பின்னர், அவர்களது காலில் விழுந்து வணங்கி பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.