உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, அங்கு பல்லயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. அதனை தொடர்ந்து இந்த வைரஸ் நோயானது 210 நாடுகளுக்கு மேலாக பரவியுள்ளது. இதனை தடுப்பதற்கு அனைத்து நாடுகளிலும் முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், உலக அளவில் இதுவரை, 2,000,065 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 126,754 பேர் இந்த வைரஸ் நோயால் உயிரிழந்துள்ளனர். இதனை தடுப்பதற்கு தேவையான மருந்தை கண்டுபிடிப்பதில், உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.